உக்ரைன் போர்: ஜனாதிபதியை சந்தித்த பிரதமர் மோடி
உக்ரைன் விவகாரம் தொடர்பாக உயர்மட்டக்குழுவுடன் அடிக்கடி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை 1,156 பயணிகள் மீட்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
By : Thangavelu
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் சூழலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்துள்ளார். உக்ரைன் மீது கடந்த 6வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதலை தொடர்ந்துள்ளது. இதனால் அங்கு இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர் சிக்கியுள்ளனர். இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்காக மத்திய அமைச்சர்கள் 4 பேர் கொண்ட குழுவை உக்ரைன் அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், உக்ரைன் விவகாரம் தொடர்பாக உயர்மட்டக்குழுவுடன் அடிக்கடி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை 1,156 பயணிகள் மீட்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்ததை சந்தித்து உக்ரைன் விவகாரம் பற்றி எடுத்துரைத்துள்ளார். இந்தியர்கள் எப்படி மீட்கப்படுகின்றன உள்ளிட்டவைகள் ஆலோசனையில் கூறப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
Source, Image Courtesy: Dinamalar