உற்பத்தியில் சாதனை படைக்கப்போகும் கோல் இந்தியா - அதிகபட்ச உற்பத்தியை நோக்கி வீறுநடை போடுகிறது

By : Mohan Raj
சுரங்க நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட், 2021-22 நிதியாண்டில், 620 மில்லியன் டன்களை தாண்டி அதிகபட்ச உற்பத்தியை சந்தித்து சாதனை படைத்துள்ளது.
சுரங்க நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண்டு மொத்த உற்பத்தியில் சரிவைச் சந்தித்து வந்தது, கொரோனா பரவல், உலக நாடுகளின் ஏற்றுமதி நிலை, பொருளாதார மந்தம் என பல காரணங்களால் இந்த நிலை கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்தது, இந்நிலையில் தற்பொழுது கோல் இந்தியா லிமிடெட் அதன் அதிகபட்ச உற்பத்தியை பதிவு செய்ய உள்ளது என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டிற்கான சுரங்க உற்பத்தி மார்ச் 28 நிலவரப்படி 614.4 மில்லியன் டன்களாக உள்ளது. 'இதன் மூலம் முந்தைய ஆண்டின் உற்பத்தியை நாங்கள் தாண்டிவிட்டோம்... மேலும் இந்த ஆண்டை 622 மில்லியன் டன்களாக நிச்சயம் முடிக்கலாம்' என்று அதிகாரி பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மேலும் 2021-22ல் நிலக்கரி அனுப்புதல் 660 மில்லியன் டன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் 670 மில்லியன் டன் உற்பத்தியை கோல் இந்தியா லிமிடெட் லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் 640 மில்லியன் டன்களை இலக்காகக் கொண்டிருப்பதாக சுரங்கத் தொழிலாளி முன்பு கூறியிருந்தார்.
2019-20 ஆம் ஆண்டில், நிறுவனம் 602 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது, மேலும் 2020-21 ஆம் ஆண்டில், உற்பத்தி 596 மில்லியன் டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
