Kathir News
Begin typing your search above and press return to search.

அசுர வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி! இந்திய விவசாயிகளுக்காக காத்திருக்கும் உலக சந்தை!

அசுர வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி! இந்திய விவசாயிகளுக்காக காத்திருக்கும் உலக சந்தை!
X

DhivakarBy : Dhivakar

  |  20 April 2022 8:48 AM GMT

"2013 -14ஆம் நிதி ஆண்டை விட சர்க்கரை ஏற்றுமதி, 291 சதவீதம் அதிகரித்துள்ளது" என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.


கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா உக்ரைன் போர் போன்ற காரணங்களால் இந்திய ஏற்றுமதி சமிபத்தில் அதிகரித்துள்ளது. முக்கியமாக உணவுப் பொருட்களின் ஏற்றுமதி அசூர வளர்ச்சியைக் கண்டு வருகிறது.


இந்நிலையில் சர்க்கரை ஏற்றுமதியின் சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில் : 2014-14 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 1,177 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது 291 சதவீதம் அதிகரித்து 2021-22ஆம் நிதியாண்டில் 4,600 மில்லியன் அமெரிக்க டாலராக அபார வளர்ச்சி அடைந்துள்ளது. நம் நாடு உலகம் முழுவதும் 120 நாடுகளுக்கு சர்க்கரையை ஏற்றுமதி செய்து வருகிறது. முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டும் சர்க்கரை ஏற்றுமதி 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலக சந்தைகளை பயன்படுத்துவது மூலம், நம் நாட்டு விவசாயிகள் தங்களது லாபத்தை அதிகரித்துக்கொள்ளலாம். இதற்கு பிரதமர் மோடி அரசு முற்றிலும் உதவி வருகிறது.

என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News