'பிரசாந்த் கிஷோரிடம் எல்லா கட்சியின் உறுப்பினர் அட்டையும் இருக்கும், அது அவர் தொழில்' - பா.ஜ.க எம்.பி திலீப் கோஷ்
By : Dhivakar
சமீபகாலமாக, தேர்தல் வியூக நிறுவனமான ஐபேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் நெருக்கமாக இருந்து வருகிறார். வரக்கூடிய முக்கியமான தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்றுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரசாந்த் கிஷோரின் இந்த செயல்பாடுகளை, மேற்கு வங்க பா.ஜ.க எம்பி திலீப் கோஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது : பிரசாந்த் கிஷோர் எந்த கட்சியில் வேலை செய்கிறாரோ அந்த கட்சியின் உறுப்பினராக இருப்பார். அந்த கட்சியின் அடையாள அட்டைகளும் வைத்திருப்பார். அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலும் இருந்தார், நிதிஷ்குமார் கட்சியிலும் இருந்தார். வெவ்வேறு கட்சிகளில் சேர்வது என்பது அவரது தொழிலாகும் " என்று விமர்சித்துள்ளார்.
பா.ஜ.க எம்.பி'யின் இந்த விமர்சனம் தேசிய அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.
பிரசாந்த் கிஷோர், 2014 நாடாளமன்ற தேர்தலில் பா.ஜ.க'வுடன் பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.