திருவனந்தபுரத்தில் இரு தரப்பு கிறிஸ்தவர்கள் இடையே மோதல்! ஏன்?
By : Dhivakar
திருவனந்தபுரம்: 'மேட்டீர் மெமோரியல்' தேவாலயத்தை, 'கத்தீட்ரல்லாக' மாற்றும் பிஷப்பின் முடிவால், திருவானந்தபுரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
நேற்று, திருவனந்தபுரத்தில் உள்ள மேட்டீர் நினைவு தேவாலயத்திற்கு முன்பு கலவரம் மூண்டது. அதற்குக் காரணம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மேட்டீர் மெமோரியல் தேவாலயத்தை, கதீட்ரலாக மாற்றும் பிஷப்பின் முடிவை எதிர்த்து இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது தான்.
திருவனந்தபுரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மேட்ரி மெமோரியல் சர்ச் ஆகும். 1906 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த சர்ச், தென் இந்தியாவின் பழமையான சர்ச்சுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இத்தகைய தொன்மை கொண்ட அந்த தேவாலயத்தை, 'கதீட்ரலாக' மாற்றும் பிஷப்பின் முடிவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். இதனால் கேரளவில் பரபரப்பு நிலவி வருகிறது.