Kathir News
Begin typing your search above and press return to search.

தண்ணீரை சேமிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: பஞ்சாப் முதல்வருக்கு சத்குரு பாராட்டு!

தண்ணீரை சேமிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: பஞ்சாப் முதல்வருக்கு சத்குரு பாராட்டு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 May 2022 12:09 PM GMT

நிலத்தடி நீரை சேமிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் திரு. பகவந்த் மான் அவர்களுக்கு சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நிலையான விவசாய முறைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக, பஞ்சாப் அரசுக்கு பாராட்டுகள். பொருளாதாரம் & சுற்றுச்சூழலை அரவணைத்து நிலையான வேளாண் முறைகளை பின்பற்ற, அரசும் கொள்கைகளும் அதற்கு உறுதுணையாக இருப்பதே முன்னேற்றத்திற்கான வழி. பஞ்சாப், பாரதம் முழுவதையும் ஊக்குவிக்கட்டும்" என தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் விவசாயிகளுக்காக வெளியிட்டுள்ள வீடியோவில், "நெல் விவசாயத்தால், நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இதனால், பஞ்சாப்பின் சில மாவட்டங்கள் ஏற்கனவே சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, வேளாண் வல்லுநர்களின் ஆலோசனைப்படி, நேரடி நெல் விதைப்பு செய்வதன் மூலம் நிலத்தடி நீரின் பயன்பாட்டை குறைக்க முடியும். இம்முறையை பின்பற்றும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்"என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News