சர்ச்சைக்குரிய இடம் கோயிலுக்கு சொந்தம் என்றால் முஸ்லீம்கள் விட்டுக்கொடுக்கனும்: உடுப்பி மடாதிபதி!
By : Thangavelu
கோயில்கள் இந்துக்களுக்கும், தர்கா என்றால் இஸ்லாமியர்களுக்கும் விட்டுக்கொடுத்து ஒற்றுமையுடன் வாழ்வதற்கு பழக வேண்டும் என்று உடுப்பி பெஜாவர் மடத்தின் விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் கூறியுள்ளார். உடுப்பியில் அவர் பேசியதாவது: பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களில் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ஒரு பின்னடைவாக பார்க்கக்கூடாது. இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். சர்ச்சைக்குரிய இடம் கோயிலுக்கு சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டால் அதனை இந்துக்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும்.
அதே சமயம் தர்கா என்று நிரூபணம் செய்யப்பட்டால் அதனை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுக்கனும். மதத்துடன் மோதிக்கொள்வதை விட்டு அனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும், கோயில்களை வாங்கி அதனை மசூதிகளாக மாற்றப்பட்டிருந்தால் அதற்கு எந்த ஆட்சேபம் இல்லை. ஆனால் கோயில்களை ஆக்கிரமித்து மசூதிகளாக மாற்றியிருந்தால் அந்த இடத்தை மீண்டம் கோயிலாக மாற்றுவது அவசியம். ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்றம் தீர்ப்பை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar