ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!
By : Thangavelu
தமிழகத்தில் இருக்கும் ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை, பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் பெட்டியினை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார். அதாவது ரயில் பெட்டிகள் அனைத்தும் 160 கி.மீ. வேகத்தை தாங்கக்கூடிய திறன் படைத்தவை ஆகும். இங்கு மட்டும் 102 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளது.
இதற்கிடையில் வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் மாதிரிகளை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். அங்கு தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டியை கொடியசைத்து துவக்கி வைத்து பேசியதாவது: இன்னும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரயில்வேத்துறையை நவீனமயமாக்கப்படும். தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆனால் தமிழகத்தில் உள்ள சிலர் இந்தியை கற்றுக்கொள்ள விடாமல் தடுத்து வருகின்றனர். மத்திய அரசு இந்தியை திணித்து விட்டதாக கூறும் சிலர், மத்திய அமைச்சர் ஒருவர் தமிழ் மொழியை ரயில்வே ஊழியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்பது தெரியவில்லை.
Source, Image Courtesy: Dinamalar