'லக்ஷ்மணன்' பெயரில் உத்தரபிரதேச தலைநகரம்: முதலமைச்சர் யோகியின் அடுத்த அதிரடி!
By : Thangavelu
உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிரடியான செயல்களுக்கு மிகவும் பிரசித்தமானவர் என்பது அனைவரும் அறிந்தது. 'புல்டோசரை' வைத்து சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை உடைத்து நிலங்களை மீட்டவர் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது அடுத்த அதிரடி செயலுக்கு இறங்கியுள்ளார். உத்தரபிரதேச தலைநகர் லக்னோவிற்கு பின்னாடி ஒரு கதை உள்ளது. ராமரின் சகோதரர் லக்ஷ்மணனுக்கு இந்த ஊரில் ஒரு அரண்மனை இருந்துள்ளது. இந்த ஊர் முன்னொரு காலக்கட்டத்தில் லக்ஷ்மண்புரி எனவும் அழைக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலேயர் காலங்களில் லக்னோ என்று பெயர் மாற்றம் அடைந்தது.
இதனை மீண்டும் லக்ஷ்மண்புரி என்கின்ற பழைய பெயருக்கு மாற்றம் செய்வதற்கு முதலமைச்சர் முடிவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இருந்தாலும், பெரும்பான்மையாக பா.ஜ.க. இருப்பதால் பெயர் மாற்றம் செய்வதில் எந்த பிரச்சனையும் வராது. ஏற்கனவே ராமருக்கு மிக பிரமாண்டமான கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில் அவரது சகோதரரின் பெயர் மாற்றம் வருவது அனைவரும் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.
Source, Image Courtesy: Dinamalar