நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்து: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் பிரமுகர் அதிரடி கைது!
By : Thangavelu
கேரளாவில், சமீபத்தில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு நடத்திய பேரணியில் பிரிவினையை தூண்டும் விதமாக கோஷங்கள் எழுப்பப்பட்ட விவகாரம் மற்றும் நீதிபதிகளை அவதூறான வகையில் பேசியதாற்காக அந்த அமைப்பினை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற முஸ்லீம் அமைப்பு ஒரு பேரணி ஒன்றை நடத்தினர். அப்போது ஒரு தந்தையின் தோள் மீது அமர்ந்திருந்த சிறுவன் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் கொன்று குவிப்போம் என்று கூறினான். இந்த சிறுவனின் பேச்சு இணையத்தில் வைரலானது. அந்த சிறுவனுக்கும் அந்த பேரணியை நடத்திய அமைப்புக்கும் கடும் கண்டனங்கள் எழுந்தது.
இந்நிலையில், கோஷம் எழுப்பிய சிறுவனின் தந்தை அதிரடியாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புடையதாக 18 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும், பிரிவினையை தூண்டும் விதமாக கோஷங்களை எழுப்பும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்திய அமைப்பினர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து நீதிபதிகளின் உத்தரவுக்கு பாப்புலர் பிரன்ட் அமைப்பின் பிரமுகர் யாஹ்யா தங்கல் என்பவர் அவதூறான கருத்துக்களை கூறி வந்த நிலையில் அவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Source: Dinamalar
Image Courtesy:Hindustan Times