கோவை 'சிட்ரா'வில் நாப்கின் தயாரிப்பு: மக்கள் நல மருந்தகங்களில்வ வழங்க மத்திய அரசு முடிவு!
By : Thangavelu
பிரதமரின் மக்கள் நல மருந்தகங்களில் மலிவு விலையில் வழங்குவதற்கு கோவை 'சிட்ரா'விலிருந்து 'சானிட்டரி நாப்கின்' வாங்கப்படுகிறது.
மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், கடந்த 25ம் தேதி கோவை வந்தடைந்த அவர், தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் (சிட்ரா) உள்ள நவீன தொழில்நுட்பங்களை பார்வையிட்டார். அப்போது அங்கு நிறுவியிருக்கும் மிகவும் அதிகமான திறன்மிக்க சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தின் இயக்கம் பற்றி வல்லுனர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், திருப்பூரில் நடைபெற்ற ஏற்றுமதியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஒரு நிமிடத்தில் 300 சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் திறன்மிக்க இயந்திரம் கோவை 'சிட்ரா'வில் இருக்கிறது. அவை பெரிய அளவில் இயக்கப்படவில்லை. இது தொடர்பாக அத்துறை அமைச்சரிடம் பேசினேன். மேலும், பிரதமர் ஜன் அவுஷதி திட்டத்தில் செயல்படுத்தப்படும் மருந்தகங்களுக்காக 'சிட்ரா'விலிருந்து சானிட்டரி நாப்கின் கொள்முதல் செய்யவும் கூறியிருந்தேன். இதற்கான உத்தரவு விரைவில் வழங்கப்படும் என்றார்.
Source, Image Courtesy: Dinamalar