உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர பாதுகாப்புப் படையில் இணைப்பு!
By : Thangavelu
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏ.எல்.எச். துருவ் மார்க் 3 ரக ஹெலிகாட்பர்கள் தற்போது இந்திய கடலோர பாதுகாப்புப் படையில் இணைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பின்னர் ராணுவ கட்டமைப்புகளுக்கு மிக, மிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதற்காக நிதிகளை வாரி வழங்கி வருகிறார். ராணுவ வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளித்தது மட்டுமின்றி எதிரி நாடுகளை துவம்சம் செய்வதற்காக போர் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் நவீன முறையில் புதுப்பித்து வருகின்றார்.
அந்த வகையில் தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏ.எல்.எச். துருவ் மார்க் ரக ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர பாதுகாப்புப் படையில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக குஜராத் மாநிலம், போர்பந்தரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கடலோர பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல் பதானியா தலைமை வகித்தார். இந்த வகை ஹெலிகாப்டர்கள் வருகையின் மூலம், பாகிஸ்தான் எல்லையில் கடல்சார் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் என அதிகாரிகள் கூறினர்.
Source, Image Courtesy: Polimer