நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு அளித்த காரணத்தினால் மேலும் ஒருவர் படுகொலை - வெளிவரும் பகீர் உண்மைகள்
By : Thangavelu
பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட ராஜஸ்தான் டைலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி மறைவதற்குள், மற்றொன்று சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் மருந்து கடை உரிமையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி நகரில் மருந்துக்கடை வைத்துள்ளவர் உமேஷ் கோல்ஹே. இவர் கடந்த ஜூன் 21ம் தேதி இரவு கடையை அடைத்து விட்டு தனது டூ வீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவியும், 27 வயது மதிக்கத்தக்க மகனும் வந்து கொணடிருந்தனர். அந்த சமயத்தில் உமேஷை சிலர் வழி மறித்து கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை, மனைவியும் மகனும் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணையில், நுபுர் சர்மாவிற்கு ஆதரவான கருத்துக்களை வாட்ஸ் அப் செயலியில் பகிர்ந்து வந்துள்ளார். அவரது கடையின் வாடிக்கையாளர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அங்கம் வகிக்கும் குழுவிலும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதற்காக இர்பான் என்பவர் உமேஷை கொலை செய்ய திட்டமிட்டு பணம் கொடுத்துள்ளார். இந்த படுகொலையில் ஈடுபட்ட அகமது 22, ஷாருக் பதான் 25, அப்துல் தொபிக் 24, சோயப் கான் 24, சோயப் கான் 22, அதிப் ரஷீத் 22 உள்ளிட்டோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் கூலி தொழிலாளர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த இர்பான் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். ராஜஸ்தானில் டைலர் கன்னையா லால் படுகொலையில் இருந்து இந்துக்கள் மீள்வதற்குள் மற்றொருவரை படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar