கொரோனா பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளி குறைத்து மத்திய அரசு அதிரடி!
By : Thangavelu
கொரோனா பெருந்தொற்று பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளியை 9 மாதங்களில் இருந்து தற்போது 6 மாதமாக குறைப்பதாக மத்திய அரசு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்று தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திய பின்னர் 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் கழித்த பின்னரே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அறிவியல் ஆதாரங்கள் மற்றும் உலக நாடுகளின் மருத்துவர்களின் அடிப்படையில் இதனை 6 மாதங்கள் அல்லது 26 வாரங்களாக குறைக்க வேண்டும் என்று துணைக்குழு அளித்திருக்கும் பரிந்துரையை தேசிய தொழில்நுட்ப குழு ஏற்று கொண்டிருக்கிறது.
எனவே இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அனைத்து பயனாளிகளும் தனியார் தடுப்பூசி மையங்களில் 6 மாதங்களுக்கு பின்னர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். அதே போன்று 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். இதற்காக கோவின் இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar