'ஆன்லைன் விளையாட்டு தடை'க்கு மாநில அரசே முடிவெடுக்கலம்' - மத்திய அமைச்சர் எல்.முருகன்!
By : Thangavelu
காரைக்காலில் மீன்பிடி துறைமுகத்தை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்தார். அப்போது மீனவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார். அப்போது 11 மீனவ கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது மீனவர்கள் இலங்கையில் இருக்கின்ற காரைக்கால் மீனவர்களின் படகுகளை உடனடியாக மீட்டுத்தர வேண்டும். மீனவர்களுக்கு டீசல் வழங்க வேண்டும். மீனவ கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர், சாலை வசதிகள் மேம்படுத்தனும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதன் பின்னர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் எல்.முருகன் ஆறுதல் கூறினார். அப்போது கண்ணீருடன் மீனவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதனை முடித்துக்கொண்ட அமைச்சர் எல்.முருகன் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: காரைக்காலில் காலரா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மேலும், ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று. அதற்கான வேலைகளில் மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar