கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு கடிதம்!
By : Thangavelu
நமது இந்திய நாட்டில் 200 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்ததை தொடர்ந்து அவர்களை பாராட்டும் வகையில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுப்பதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொருவருக்கும் இரண்டு தவணையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜூலை 17ம் தேதி முதல் 200 கோடி என்ற டோஸ் மைல்கல்லை இந்தியா கடந்து சாதனை புரிந்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், 200 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி சாதனை படைத்த அனைவருக்கும் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார். இதனை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் கோவின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar