Kathir News
Begin typing your search above and press return to search.

மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை நிறைவேற்றி அசாம் முதல்வர்!

மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை நிறைவேற்றி அசாம் முதல்வர்!

ThangaveluBy : Thangavelu

  |  22 July 2022 12:22 PM GMT

பிரதமர் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்த அசாம் மாநிலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஓவியரை அம்மாநில முதலமைச்சர் நேரில் அழைத்து சென்று அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

அசாம் மாநிலம், சில்சர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித் கோதானி 28, இவர் மாற்றுத்திறனாளி ஆனவர் இவர். ஆனால் ஓவியத்தில் திறமை வாய்ந்தவர் ஆவார்.

இதற்கிடையில் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாமை சந்தித்தார். அப்போது அவருக்கு ஓவியம் ஒன்றை பரிசளித்த அபிஜித், பிரதமர் மோடியை சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று எழுதினார். அதனடிப்படையில் சந்திப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இது பற்றி கேள்விப்பட்ட அபிஜித் தன்னுடைய தாயார் மற்றும் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா உடன் செல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது பிரதமருக்காக வரைந்த ஓவியத்தை பரிசாக வழங்கினார். அந்த ஓவியத்தில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் அமைந்திருந்தது. மோடி, அவரது தாயாரிடம் ஆசி வாங்குவது போலவும், ஐக்கிய நாடுகளின் சபையில் பேசுவது போன்றும், சிறுவயது முதல் பிரதமராக பதவியேற்றது வரையிலான படங்கள் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது. மேலும், பிரதமரை சந்தித்து மிகுந்த சந்தோஷத்தை கொடுத்திருப்பதாக அபிஜித் கூறியிருந்தார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News