Kathir News
Begin typing your search above and press return to search.

வணக்கம் மோடி: ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்!

வணக்கம் மோடி: ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்!

ThangaveluBy : Thangavelu

  |  29 July 2022 5:47 AM GMT

தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்திருப்பதை தொடர்ந்து ட்விட்டர் சமூக வலைதளத்தின் டிரெண்டிங்கில் வணக்கம் மோடி என்ற பதிவு முதல் இடத்தை பிடித்துள்ளது.

சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதற்காக நேற்று (ஜூலை 28) சென்னைக்கு விமானம் மூலம் வருகை புரிந்தார். அதன் பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு சென்ற அவர் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து நேற்று இரவு சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கினார். இன்று சென்னை அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக பா.ஜ.க.,வினர் 'வணக்கம் மோடி' என்ற ஹேஷ்டேக் பதிவு மற்றும் வாழ்த்து பாடல்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அதனை பல லட்சம் பேர் பிரதமர் மோடியை வரவேற்று பதிவு செய்தனர். இதன் காரணமாக அப்பதிவி தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News