பாதுகாப்புத் துறையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் - பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிடும் அடுத்தகட்ட பிளான்!

By : Kathir Webdesk
பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு பாதுகாப்புத் திறன் கட்டமைப்புக்கான புதுமை கண்டுபிடிப்புகள் திட்டத்தை அரசு தொடங்கியது.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், தனி நபர் கண்டுபிடிப்பாளர்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை இதில் ஈடுபடுத்தும் வகையில் இது தொடங்கப்பட்டது. இந்த கட்டமைப்பின் கீழ் இதுவரை பாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்களின் 7 பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுவரை 136 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு, 102 ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக 2021-2022 ஆம் ஆண்டில் இருந்து 2025-26-ம் நிதியாண்டு வரை 5 ஆண்டுகளுக்கு ரூ.498.78 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தவிர நாட்டிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை மேம்படுத்த தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ் அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கொவிட்-19 நெருக்கடியால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டும் வணிகத்தைத் தொடங்கவும், செயல்பாட்டுக்கான செலவை எதிர்கொள்ளவும் தகுதிவாய்ந்த எம்எஸ்எம்இ-களுக்கும் மற்ற வணிக நிறுவனங்களுக்கும் உதவிசெய்ய தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக மே 2020-ல் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் 2023 மார்ச் 31 வரை செல்லுபடி உள்ளதாகும்.
Input From: Financial Express
