கந்துவட்டிக் காரர்களின் பிடியிலிருந்து விடுவித்த பிரதமரின் மக்கள் நிதித் திட்டம்!

By : Kathir Webdesk
பிரதமரின் மக்கள் நிதித் திட்டம், மக்கள் நலன்சார்ந்த பொருளாதார முன் முயற்சிகளுக்கு அடிக்கல் ஆகும். நேரடி பணப்பரிமாற்றமானாலும் சரி, கொவிட்-19 நிதியுதவி, பிரதமரின் கிசான் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் சம்பள உயர்வு, ஆயுள் மற்றும் சுகாதார காப்பீடுகள் ஆனாலும் சரி, இந்த அனைத்து திட்டங்களுக்கான முதல்படி, தகுதி வாய்ந்த அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்குவது என்பது ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது.
மார்ச்'14 முதல் மார்ச்'20 வரையிலான காலத்தில் தொடங்கப்பட்ட கணக்குகளில் இரண்டில் ஒன்று பிரதமரின் மக்கள் நிதித்திட்ட கணக்காகும். நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பத்து நாட்களுக்குள், பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தின்கீழ் கணக்கு வைத்துள்ள சுமார் 20 கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் கணக்கில் ஊக்கத்தொகை வரவு வைக்கப்பட்டது.
மக்கள் நிதித் திட்டம், ஏழைகள் தங்களது சேமிப்புகளை முறையான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வழிவகை ஏற்படுத்தி இருப்பதுடன், கிராமங்களில் உள்ள இவர்களது குடும்பங்களுக்கு பணம் அனுப்புவதற்கும், கந்துவட்டிக் காரர்களின் பிடியிலிருந்து விடுவிக்கவும் வகை செய்துள்ளது.
பிரதமரின் மக்கள் நிதித் திட்டம், இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் வங்கிக் கணக்கு தொடங்க உதவியிருப்பதுடன், இந்தியாவின் நிதி கட்டமைப்பையும் விரிவுபடுத்தி இருப்பதோடு, தகுதிவாய்ந்த அனைவருக்கும் உள்ளார்ந்த நிதி சேவைகளையும் வழங்கியுள்ளது.
தற்போதைய கொவிட்-19 காலத்தில், நேரடி பணப்பரிமாற்றம் மூலம் விரைவான மற்றும் தடையற்ற பணப் பரிவர்த்தனையை நாம் கண்டதுடன், சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கு அதிகாரமளித்து நிதிப் பாதுகாப்பை வழங்கியுள்ளது.
நேரடி பணப்பரிமாற்றத்தின் முக்கிய அம்சம் யாதெனில், பிரதமரின் மக்கள் நிதி கணக்குகள், அரசால் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் உரிய பயனாளியை சென்றடைவதுடன், அரசின் நடைமுறைகளில் காணப்பட்ட தவறுகளையும் தடுத்துள்ளது.
Input From: news On air
