சட்டக் கல்லுாரி புத்தகத்தில் மத உணர்வை துாண்டும் கருத்து - பேராசிரியர் பர்ஹத் கான்னுக்கு இவ்வளோ வன்மம் ஏன்?
By : Kathir Webdesk
மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில் உள்ள அரசு சட்டக் கல்லுாரி நுாலகத்தில், குழு வன்முறை மற்றும் குற்றவியல்நீதி அமைப்பு என்ற புத்தகம் இருந்தது. இதை, பர்ஹத் கான் என்ற பெண் எழுதியிருந்தார். அதில் இந்து மதத்திற்கு எதிரான கருத்துகள் நிரம்பி இருந்தன.
புத்தகத்தில் மத உணர்வு மற்றும் மத பயங்கரவாதத்தை துாண்டும் வகையிலான கருத்துக்கள் அடங்கி இருந்தது. ஆர்.எஸ்.எஸ்., போன்ற ஹிந்து அமைப்புகளுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்று இருந்ததாக புகார் எழுந்தது.
பா.ஜ.க மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி மத்திய பிரதேச போலீசில் புகார் கொடுத்தது. புத்தகத்தின் ஆசிரியர், கல்லுாரி முதல்வர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மத உணர்வை துாண்டும் வகையிலான புத்தகத்தை எழுதியதாக, பர்ஹத் கான் புனேயில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிறுநீரகம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், தினமும், டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலையில் உள்ளார்.
Input From: Dinamalar