மணிப்பூரை தீவிரவாதம் இல்லாத மாநிலம் ஆக்கியது பாஜக அரசு!
By : Kathir Webdesk
பாஜக அரசு மணிப்பூரை தீவிரவாதம், போராட்டங்களில் இருந்து விடுவித்து மாநிலத்தில் வளர்ச்சியைக் கொண்டுவந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கிளர்ச்சியை ஒடுக்கி, ஆறு மாவட்டங்களில் ஆயுதப்படை சட்டம் 1958-ஐ நீக்கியுள்ளது. மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியின்போது இங்கு பயங்கரவாத சூழல் நிலவியது. தற்போது சிறந்த ஆட்சி நடக்கும் சிறிய மாநிலமாக மணிப்பூர் மாறியிருக்கிறது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த எட்டு ஆண்டுகளுக்குள்ளாக வடகிழக்கு மாநிலங்களில் ரூ.3.45 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி 51 முறை இந்த பிரந்தியங்களுக்கு வருகை புரிந்துள்ளார்.
முதல்வர் என்.பீரேன் சிங் அரசு போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அடுத்த தேர்தலுக்குள் பாஜக அரசு மணிப்பூரை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் என அமித் ஷா கூறினார்.
மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங்க் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இது பற்றி பேசினார்.
இந்தியா-மியான்மர் இடையேயான சர்வதேச எல்லைப்பகுதியில் 34 போஸீல் காவல் மையங்கள், தேசிய நெடுஞ்சாலை 34 நாளில் 6 போலீஸ் காவல் மையங்கள் என 40 போலீஸ் காவல் மையங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
Input From: Hindu