அரசு ஊழியர்கள் திறனை வளர்க்க கர்மயோகி திட்டம்!
By : Kathir Webdesk
அரசு நிர்வாக நடவடிக்கைகளை நம்பிக்கை அடிப்படையில் மேம்படுத்த ஜன் விஷ்வாஸ் மசோதா கொண்டு வரப்பட உள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் திறனை ஆன்லைன் மூலம் வளர்த்துக் கொள்ள கர்மயோகி திட்டம் செயல்படுத்தப்படும்.
பயோ மின் திட்டங்களுக்கு ரூ10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நாடு முழுவதும் எந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்ற திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
கடலோர பகுதிகளை இணைப்பதற்கான படகு போக்குவரத்து திட்டம் உருவாக்கப்படும். காலாவதியான பழைய வாகனங்களை மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கடலோர பகுதிகளை இணைப்பதற்கான படகு போக்குவரத்து திட்டம் உருவாக்கப்படும். காலாவதியான பழைய வாகனங்களை மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அனைத்து துறைகளிலும் ஆற்றலை சரியாக பயன்படுத்த கிரீன் எரிபொருள், கிரீன் எனர்ஜி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இது கார்பன் உமிழ்வைக் குறைப்பதுடன், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
வர்த்தகம் புரிதலை எளிமையாக்கும் வகையில் 39 ஆயிரத்திற்கும் அதிகமான நடைமுறைகள் நீக்கப்படுகிறது. 42 புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.
மாநிலங்களின் மூலதன முதலீட்டுக்கு ஆதரவு அளிக்கப்படும். 100 முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன ஆவணங்களைப் பாதுகாக்க டிஜிட்டல் இ லாக்கர்கள் உருவாக்கப்படும்.
சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ9,000 கோடி கடன் வழங்கப்படும். 50 சுற்றுலா இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்படும். 5 ஜி செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள்; இ கோர்ட் திட்டத்துக்கு ரூ7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறதாகு.
முதியோர் வைப்பு தொகை வரம்பு ரூ30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பசுமை எரிசக்தி மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.