Kathir News
Begin typing your search above and press return to search.

இனி ஹெலிகாப்டர் தயாரிப்புன்னா இந்தியாதான் - சொல்லி வைத்து கில்லி மாதிரி அடித்த பிரதமர் மோடி

இனி ஹெலிகாப்டர் தயாரிப்புன்னா இந்தியாதான் - சொல்லி வைத்து கில்லி மாதிரி அடித்த பிரதமர் மோடி
X

Mohan RajBy : Mohan Raj

  |  8 Feb 2023 7:41 AM IST

மேக் இன் இந்தியா திட்டத்தின் அடுத்த கட்ட பாய்ச்சலாக ஆசியாவிலேயே இந்தியாவை ஹெலிகாப்டர் தயாரிப்பின் தாயகமாக மாற்ற பிரதமர் மோடி பெரும் முயற்சி எடுத்து சாதித்துக்காட்டியுள்ளார்.

அதன் முக்கிய நிகழ்வாக கர்நாட மாநிலம் தும்கூருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடட் நிறுவனத்தின் சார்பில் உருவாக்ககப்பட்ட நாட்டின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி இன்று தேசத்துக்கு அர்ப்பணித்தார்!

இதுல முக்கியமான விஷயம் என்னன்னா இன்னைக்கு திறப்புவிழா நடக்குற தொழிற்சாலைக்கு போன 2016ம் வருஷம் அடிக்கல் நாட்டினதும் பிரதமர் மோடிதான் அப்டின்றது வரலாற்று சிறப்புமிக்க உண்மைங்க! இந்த மிகப்பெரிய திட்டத்தை போட்டது மட்டுமில்லாது, அடிக்கல் நாட்டி, அதை திறந்து வச்சு சாதிச்சு காமிச்சுட்டாரு பிரதமர் மோடி.

இது தவிர “ இந்தியா எரிசக்தி வாரம் 2023” என்ற திட்டத்தையும் பெங்களூருவில் பிரதமர் மோடி தொடங்கி வச்சிருக்காரு, இந்த திட்டத்தால பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல்-மே மாதத்தில் நடக்க இருக்குங்க, இதுல முக்கியான விஷயம் என்னன்னா இந்த 3வது முறையாக பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் வர்றதுதான்.

இந்த நிகழ்ச்சியில் உலகளவில் இருந்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள், 3ஆயிரம் பிரதிநிதிகள், 1000 அரங்குகள், 500 விளக்கக்கூட்டங்கள் மூலம் இந்தியாவின் எதிர்கால எரிசக்தி திட்டங்கள் குறித்து ஆலோசிக்க மிகப்பெரிய திட்டம் இருக்குங்க!

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் சி.இ.ஓ'க்களுட பேச்சு வார்த்தை நடத்துறார். அடுத்தபடியா எத்தனால் கலந்து பெட்ரோல் விற்கும் 84 சில்லறை விற்பனை நிலையங்களை 11 மாநிலங்களில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி முடிச்சுட்டு பிற்பகலில் தும்கூரு மாவட்டத்துக்கு செல்கிறார். அங்கு எச்ஏஎல் நிறுவனம் சார்பில் நாட்டிலயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார். இந்த தொழிற்சாலை மூலம் இலகுரக ஹெலிகாப்டர்கள் நிறையவே தயாரிக்க முடியும்.

இலகு ரக போர் ஹெலிகாப்டர், இந்திய பன்முக ஹெலிகாப்டர், சிவில் ஹெலிகாப்டர் ஆகியவற்றை எதிர்காலத்தில் இந்த தொழிற்சாலை மூலம் தயாரிக்க முடியும். இதன் மூலம்இந்தியாவின் ஹெலிகாப்டர் தேவையை உள்நாட்டிலேயே எதிர்காலத்தில் நிறைவேற்ற முடியும். ஹெலிகாப்டர் வடிவமைப்பு, மேம்பாடு, தயாரிப்பை இந்தியாவில் இனிவரும் காலங்களில் செய்ய முடியும்

தேசிய தொழிற்துறை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தும்கூரு தொழிற்துறை நகரத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த தொழில்நகரம் 8,484 ஏக்கரில் அமைய உள்ளது, 3 பிரிவுகளாகக் கட்டப்படஉள்ளது. சென்னை-பெங்களூரு தொழிற்துறை நகரின் ஒருபகுதியாக இந்த நகரத்தை கட்டிட்டு வர்ராங்க மத்திய அரசு

Next Story
கதிர் தொகுப்பு
Trending News