Kathir News
Begin typing your search above and press return to search.

பவர் கட் இல்லாத கோடைகாலம்: மத்திய அரசு வகுத்துள்ள வியூகம் - அமைச்சரவை கூட்டத்தில் அசத்தல் முடிவு!

பவர் கட் இல்லாத கோடைகாலம்: மத்திய அரசு வகுத்துள்ள வியூகம் - அமைச்சரவை கூட்டத்தில் அசத்தல் முடிவு!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 March 2023 7:57 AM IST

கோடைக்காலத்தின் போது போதுமான அளவில் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய மின்சார அமைச்சகம் பன்முனை உத்திகளை வகுத்துள்ளது.

இந்த உத்திகளின் ஒரு பகுதியாக, நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் உற்பத்தி நிலையங்களில், முன்கூட்டியே தேவையான அனைத்துப் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ளுமாறு மின் பயன்பாட்டு அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்போதுதான் பற்றாக்குறை காலத்தில் இது போன்ற பராமரிப்பு பணிகளுக்கான தேவை இருக்காது. இறக்குமதி நிலக்கரியை அடிப்படையாக கொண்ட அனல் மின் நிலையங்கள் மார்ச் 16-ந் தேதி முதல் முழு உற்பத்தித் திறனுடன் இயங்குமாறு பிரிவு 11-ன் கீழ் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்பு வைக்கப்படும்.

ரயில்வே வாரிய உறுப்பினர் நிலக்கரியை பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்ல போதுமான ரயில் பெட்டிகள் கிடைப்பதை உறுதி செய்துள்ளார்.

உச்சக்கட்ட தேவையை சமாளிக்க வாயு அடிப்படையிலான மின்சாரம் பயன்படுத்தப்படும். ஏப்ரல், மே போன்ற பற்றாக்குறை காலங்களில் 5000 மெகாவாட் வாயு அடிப்படையிலான மின் நிலையங்களை இயக்குமாறு என்டிபிசி நிறுவனத்திற்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது கோடைக்காலத்தில். கூடுதலாக 4000 மெகாவாட் வாயு அடிப்படையிலான மின்திறனை மற்ற அமைப்புகள் மூலம் அதிகரிக்கப்படும்.

கோடை மாதங்களில் போதுமான அளவு வாயு விநியோகத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக கெய்ல் நிறுவனம் அமைச்சகத்திற்கு உறுதி அளித்துள்ளது. அடுத்த மாதத்தில் உற்பத்திக்குப் போதுமான அளவு தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் நடப்பு மாதத்தில் தண்ணீரை பயன்படுத்துமாறு அனைத்து புனல் மின் நிலையங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

புதிய நிலக்கரி சார்ந்த மின் நிலையங்கள் மூலமாக கூடுதலாக 2,920 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் வகையில் மார்ச் மாதத்திற்குள் அவை நிறுவப்படும். இதற்கும் மேலாக பற்றாக்குறை காலத்தில் பாராவுனியில் தலா 110 மெகாவாட் திறன் கொண்ட 2 மின் உற்பத்தி அலகுகள் அமைச்சகத்தின் உத்தரவுபடி தயார் நிலையில் வைக்கப்படும்.

கோடை மாதங்களில் மின் தட்டுப்பாடு இல்லையென்பதை உறுதி செய்யுமாறு மின்சார நிறுவனங்களை மத்திய மின்சாரத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார். வரும் மாதங்களில் மின்சாரத் தேவையை சமாளிக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருமாறும் சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

Input From: EnergyAsia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News