Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா வாங்கினது எல்லாம் அந்தக்காலம்: உலக நாடுகளுக்கே இனி நம்ம தான் வெப்பன் சப்ளையர்!

இந்தியா வாங்கினது எல்லாம் அந்தக்காலம்: உலக நாடுகளுக்கே இனி நம்ம தான் வெப்பன் சப்ளையர்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 March 2023 6:45 AM IST

2022-2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதி மதிப்பு ரூ.13,399 கோடியாக அதிகரித்துள்ளது.

சிறப்பு ரசாயனம், மூலக்கூறு, கருவி, தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட 6 அம்சங்களை உள்ளடக்கிய வெடிமருந்து பட்டியலை ஏற்றுமதி செய்வதற்கு பாதுகாப்பு உபகரண உற்பத்திப் பிரிவு அனுமதி அளித்துள்ளது. இந்த ஏற்றுமதிக்கான அங்கீகாரம் இத்துறையால் வெளியிடப்பட்ட தர நடைமுறைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த உபகரணங்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.

2017-18 ஆம் நிதியாண்டில் ரூ.4,682 கோடியாகவும், 2018-19 ஆம் நிதியாண்டில் ரூ.10,746 கோடியாகவும், 2019-20 ஆம் நிதியாண்டில் ரூ.9,116 கோடியாகவும் இருந்துள்ளது. இதே போல் 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.8,435 கோடியாகவும், 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.12,815 கோடியாகவும் இருந்தது.

இதே போல 2018-19 ஆம் ஆண்டு முதல் 2022 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பாதுகாப்புத் துறைக்கான இறக்குமதி 46 சதவீதத்திலிருந்து 36.7 சதவீதமாக குறைந்திருக்கிறது.

பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை எட்ட ஏதுவாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 411 முக்கிய ராணுவ உபகரணங்களை உள்ளடக்கிய உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் 4 கருவிகள் குறித்த அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

இதே போல் 26,000-க்கும் மேற்பட்ட ராணுவ உபகரணங்கள் ஸ்ரீஜன் இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை தேவையை கருத்தில் கொண்டு 7,031 கருவிகள் ஏற்கனவே உள்நாட்டுமயமாக்கப்பட்டுள்ளன.

Input From: TFI post

Next Story
கதிர் தொகுப்பு
Trending News