இனி யாரை நம்பியும் நாங்க இல்ல! இந்தியாவின் சொந்த தயாரிப்பில் வெளுத்து வாங்கப்போகும் ஏவுகணை, ரேடார் - அசத்தல் தொழில்நுட்பம்!
By : Kathir Webdesk
தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடையும் வகையில், ராணுவத்திற்காக தரம் உயர்த்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை மற்றும் சமவெளிகளைக் கண்டறியும் 12 ரேடார் ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்காக ரூ.9,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம்
தரம் உயர்த்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை கொள்முதலுக்கான ஒப்பந்தமானது பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.8,160 கோடியாகும்.
இந்த ஆயுதங்கள் ராணுவத்தின் வான் பாதுகாப்பு படைப்பிரிவுக்காக கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட ஏவுகணைகள், தரையிலிருந்து உதவும் கருவிகள் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
ஆகாஷ் ஆயுத முறை என்பது நிலத்திலிருந்து வான்வழி நோக்கி குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் தன்மை படைத்த வான்வழிப்பாதுகாப்பு முறையாகும்.
இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வான்வழி ஊடுருவல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஏதுவாக இந்த தரம் உயர்த்தப்பட்டு வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் வடக்கு எல்லைகளில் ராணுவப் பயன்பாட்டிற்காக இவை கொள்முதல் செய்யப்படுகின்றன.
மேலும் 11 நவீன ஆழ்கடல் ரோந்து கப்பல்கள் மற்றும் 6 ஏவுகணை தாங்கி கப்பல்களை வாங்க உள்நாட்டு கப்பல் கட்டும் நிறுவனங்களுடன், பாதுகாப்பு அமைச்சகம் ரூ.19,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த 11 கப்பல்களில் 7 கப்பல்கள் ஜிஎஸ்எல் நிறுவனத்தின் மூலமாகவும், 4 கப்பல்கள ஜிஆர்எஸ்இ நிறுவனத்தின் மூலமாகவும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த கப்பல்கள் 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முழுமையாக வடிவமைக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கப்பல்கள் அதிக ஆயுதங்களுடன் அதி வேகத்தில் தாக்குதல்களை நடத்த முடியும். எதிரிகளின் கப்பல்களையும், குறிப்பிட்ட இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன்படைத்தவையாக இவை திகழும்.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படும் இந்த கப்பல்களுக்குத் தேவையான பெரும்பாலான பாகங்கள் இந்தியாவிலேயே முழுமையாக வடிவமைக்கப்படும்.
இதன் மூலம் இந்திய கப்பல் கட்டும் நிறுவனங்களும், துணை நிறுவனங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் இத்துறையில் பங்கேற்று பெரிதும் பயனடையும். தற்சார்பு இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாக இவை பெருமையுடன் திகழும்.
Input From: Indian Express