தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையில் இந்தியா கண்ட வெற்றி - பாராட்டி தள்ளுது யுனிசெஃப்!
By : Kathir Webdesk
யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆய்வு செய்யப்பட்ட 55 நாடுகளில் சீனா, இந்தியா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் மட்டுமே குழந்தைகளுக்கான தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றி ஒரு உறுதியான நம்பிக்கை ஏற்ப்பட்டுள்ளது.
கோவிட்19 நோய் தொற்றின் காரணத்தாலும், தூண்டுதலாலும், சுமார் 30 ஆண்டுகளில் இல்லாத அளவில், உலகளவில் குழந்தைக்கான தடுப்பூசி மீதான நம்பிக்கை சரிவைக் காண்கின்றது. கோவிட்19 காலக்கட்டத்தில், பெருவாரியாக அனைத்து சுகாதார துறையினர் கொரோனா பணிகளுக்கு கவனம் கொடுக்கப்பட்டது, சுகாதார மையங்கள் கோவிட்19 தடுப்பூசி மையமாக மாற்றப்பட்டது.
கோவிட்19 தொற்று நோயின் போது #largestvaccinesdrive தடுப்பூசி இயக்கமானது, அதன்மூலம் குழந்தைகளுக்கான தடுப்பூசி மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. தடுப்பூசி குழந்தைகளை நோயிலிருந்து காத்து, ஆரோக்கியமாக வாழவும், சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிக்கவும் அனுமதிக்கிறது.
இது மனிதகுலத்தின் குறிப்பிடத்தக்க வெற்றிக் கதைகளில் ஒன்றாகும். இந்த, தடுப்பூசித் திட்டம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல முழு சமூகத்திற்கும் நன்மை பயக்கும் சமத்துவத்தின் முக்கிய அடையாளமாகும் என்று யுனிசெஃப்-ன் இந்திய பிரதிநிதி சிந்தியா மெக்காஃப்ரி கூறினார்,
2019 மற்றும் 2021-க்கு இடையில் மொத்தம் 67 மில்லியன் குழந்தைகள் தடுப்பூசிகளை தவறவிட்டதாக அறிக்கை எச்சரிக்கிறது. 112 நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் அளவுகள் குறைந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, 2022-ல், தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.
போலியோவால் முடங்கிய குழந்தைகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் ஆண்டுக்காண்டு 16 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தை முந்தைய மூன்றாண்டு காலத்துடன் ஒப்பிடும்போது, போலியோவால் முடங்கிய குழந்தைகளின் எண்ணிக்கையில் எட்டு மடங்கு அதிகரித்துள்ளது. இது தடுப்பூசி முயற்சிகள் நீடித்திருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
2020-21-க்கும் இடைப்பட்ட காலத்தில் சுத்தமாக தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை 3 மில்லியனாக அதிகரித்தப் போதிலும், இந்தியாவில் இந்த எண்ணிக்கை 2.7 மில்லியனாக இருந்தது. இது இந்தியாவில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகும். இந்தச் சாதனையானது, அரசாங்கத்தால் நடத்தப்பட்ட தொடர்ச்சியான பிரச்சாரங்கள் மற்றும் இந்திர தனுஷ் தடுப்பூசி திட்டத்தினால் சாத்தியமானது.
Input From: NewsOnair