Kathir News
Begin typing your search above and press return to search.

ரூட்டை மாற்றிய இந்திய ரயில்வே: திட்டம் போட்டு தடுக்கப்பட்ட அசம்பாவித சம்பவங்கள்!

ரூட்டை மாற்றிய இந்திய ரயில்வே: திட்டம் போட்டு தடுக்கப்பட்ட அசம்பாவித சம்பவங்கள்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 April 2023 9:15 AM IST

இந்திய ரயில்வேயின், ரயில்வே பாதுகாப்பு படை, ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உறுதிபூண்டுள்ளது. இதற்காக ரயில் பயணிகள் காத்திருக்கும் அறை உள்ளிட்ட இடங்களில் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 207 கடத்தல் சம்பவங்களில் 604 பேரை ரயில்வே பாதுகாப்புப் படை மீட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் குடும்பத்தை விட்டு பிரிந்த 17,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் இணைவதற்கு ரயில்வே பாதுகாப்பு படை முக்கியப் பங்கு வகித்துள்ளது.

ரயில் நிலையங்களில் தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து தவிக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகவும், மீட்பதற்காகவும் நான்கே ஃபரிஸ்டே என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதேபோல் ஆட்கடத்தலுக்கு எதிரான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆப்ரேஷன் ஜீவன் ரக்ஷா மூலம் ரயில்வே பாதுகாப்புப்படையினர் கடந்த 2022-23 நிதியாண்டில் ரயில், நடைமேடைகள் மற்றும் ரயில்பாதைகளில் 873 ஆண்கள் மற்றும் 543 பெண்களை விபத்திலிருந்து காப்பாற்றியுள்ளனர். ஆப்ரேஷன் அமநாத் மூலம் 2022-23 நிதியாண்டில் 32,337 பயணிகளுக்கு சொந்தமான 500 கோடிக்கு மதிப்பிலான உடமைகள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆப்ரேஷன் மாற்றிசக்தி மூலம் 220 பெண்களுக்கு ரயில் பயணத்தின் போது, மகப்பேறு நிகழ்ந்துள்ளது. இதற்கு 158 பெண்கள் உதவி செய்துள்ளனர்.

864 ரயில் நிலையங்களில், 6,646 ரயில்பெட்டிகளில் மகளிர் பாதுகாப்புக்காக சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

2022-23-ம் நிதியாண்டில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் ரயிலில் கடந்த முயன்ற ரூ.81 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஆப்ரேஷன் வில்ஃப் மூலம் ரயிலில் கடத்தப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 2022-23-ம் நிதியாண்டில் இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை 108 வழக்குகளை பதிவு செய்திருப்பதுடன், கடத்தல் குற்றவாளிகள் 68 பேரையும் கைது செய்துள்ளது.

Input From: India.gov.in

Next Story
கதிர் தொகுப்பு
Trending News