சோஷியல் மீடியாவில் பரவும் தீவிரவாதம்: பயங்கரவாதிகள் கைகளுக்கு ரகசியமாக போகும் பணம் - அமைச்சர் ராஜ்நாத்சிங் பரபர!
By : Kathir Webdesk
தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவத்திலும் வேரறுப்பதில் ஷாங்காய் கூட்டமைப்பு உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர, தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்பவர்களையும், நிதி உதவி வழங்குபவர்களையும் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றார்.
மனித குலத்திற்கு எதிரான முக்கிய குற்றங்களை அறங்கேற்றும் தீவிரவாதமும், தேசத்தின் அமைதியும், செழுமையும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், ஒரு தேசம் தீவிரவாதிகளுக்கு புகலிடமாக இருக்கிறது என்றால் அது அந்த நாட்டிற்கு மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளுக்குமே விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும் என்றும் கூறினார். இளைஞர்களிடையே தீவிரவாதம் மேலோங்குவதை நாட்டின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்காமல், சமூகத்தின் பொருளாதார முன்னேற்றப் பாதைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் கருத வேண்டும் என்றார்.
ஏனெனில் பாதுகாப்பான, நீடித்த மற்றும் செழுமையான பகுதிகளே ஒவ்வொரு தேசத்தின் மக்களுக்கும் அவர்களது வாழ்க்கையை தரமானதாக முன்னேற்ற, வழிவகுக்கும் என்று திரு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
செக்யூர் எனப்படும் பாதுகாப்பு என பொருள்படும் ஆங்கில வார்த்தை, நாட்டு மக்களின் பாதுகாப்பு, அனைவருக்குமான பெருளாதார முன்னேற்றம், மண்டலங்களுக்கிடையேயான இணைப்பு, மக்களை ஒருங்கிணைத்தல், ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் மரியாதை செலுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது என்பதே பிரதமர் நரேந்தர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படை என்று கூறினார்.
உலகின் பல பகுதிகள் தற்போது உணவுப் பிரச்சனையை எதிர்கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டிய ராஜ்நாத்சிங், ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் உணவுப் பாதுகாப்பை ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பயிற்சிகள், ஒருங்கிணைந்த தயாரிப்பு ஆகியவற்றின் மூலம் ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று காலம் மற்றும் நிலைகுலையச் செய்த நிலநடுக்கத்தின் போது, உலகை ஒரே குடும்பமாக பாவிக்கும் வசுதெய்வ குடும்பகம் என்ற உத்வேகத்தின் அடிப்படையில் இந்தியா மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொண்டதையும் ராஜ்நாத்சிங் நினைவுகூர்ந்தார்.
Input From: NewsOnAir