Kathir News
Begin typing your search above and press return to search.

திரைப்பட திருட்டுக்கும் வருது ஆப்பு - பக்கா பிளானோடு மத்திய அரசு கொண்டு வரப்போகும் மாற்றம்!

திரைப்பட திருட்டுக்கும் வருது ஆப்பு - பக்கா பிளானோடு மத்திய அரசு கொண்டு வரப்போகும் மாற்றம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 May 2023 9:00 AM IST

"உலக அரங்கை அடையும் வகையில், ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையை ஊக்குவித்து, ஆதரவளிக்க அரசு விரும்புகிறது" என்று மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் அபூர்வ சந்திரா கூறியுள்ளார்.

அரசு நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழில்துறையின் முன் இருக்கும் மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பு சவால்களை சமாளிப்பது குறித்து விளக்கினார். “தொழில்துறையில் அதிக மனிதவளம் வரும் வகையில் மேலும் மேலும் நிறுவனங்களை அமைக்க தொழில்துறையுடன் இணைந்து பணியாற்ற அரசு உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.

தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்கம் குறித்து பேசிய செயலாளர், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் தங்களுக்கு பிடித்த திரைப்படங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் மீட்டெடுப்பதற்கு நிதியளிக்கும் திட்டத்தை அரசு விரைவில் தொடங்கும் என்று கூறினார்.

ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் மறுசீரமைப்பு செய்வதை அரசு இலக்காகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இதில் 1400 திரைப்படங்கள் மற்றும் 1100 குறும்படங்கள் ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சமீபத்திய கொள்கை முடிவுகள் திரைப்படத் திருட்டைத் தடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த செயலாளர், “திருட்டுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக சினிமாட்டோகிராஃப் சட்டத்தை மாற்றியமைக்க அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தச் சட்டம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது. விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம். இதன் மூலம் திருட்டுத்தனமாக படங்களைக் காட்டும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு நேரடி அதிகாரம் கிடைக்கும்’’, என்று கூறினார்.

Input From: ANI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News