Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய பொருளாதரத்தை அசைக்க முடியாது : ஐ.நா. அறிக்கையில் வெளியான ஆச்சர்ய தகவல்!

இந்திய பொருளாதரத்தை அசைக்க முடியாது : ஐ.நா. அறிக்கையில் வெளியான ஆச்சர்ய தகவல்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 May 2023 7:39 AM IST

இந்தியப் பொருளாதாரமானது விவசாயம், கைவினைப் பொருட்கள், தொழில் துறை, மற்றும் சேவைத் துறை போன்ற பலவற்றைச் சார்ந்துள்ளது.

சேவைத் துறையே இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கானது நேரடியாகவோ மறைமுகமாகவோ விவசாயத்தையே சார்ந்துள்ளது.

ஐ.நா. உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி மிக பிரகாசமாக இருக்கும். இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 2023-ல் 5.8 சதவீதமாகவும், 2024-ம் ஆண்டில் 6.7 சதவீதமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு தேவை மீண்டு வருவது பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும், அதிக வட்டி விகிதம், வெளிப்புறத் தேவையில் காணப்படும் தொய்வு நிலை ஆகியவை தொடர்ந்து நடப்பாண்டுக்கான இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் முதலீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதேசமயம், பணவீக்கம் 2023-ல் 5.5 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு, உலகளவில் பொருட்களின் விலை மிதமான அளவில் காணப்படுவது முக்கிய காரணமாக இருக்கும்.

உலகப் பொருளாதாரம் 2023-ல் 2.3 சதவீதம், 2024-ல் 2.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Input From: HIndu


Next Story
கதிர் தொகுப்பு
Trending News