அரபு நாடுகளுடன் இனி ரூபாயில் வர்த்தகம்: பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
By : Kathir Webdesk
பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக இந்தியா-அமீரகம் இடையே உள்ளூர் கரன்சியிலேயே வர்த்தகம் நடைபெறும் என இரு நாடுகளும் அறிவித்துள்ளன.
மேலும் எரிபொருள், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்கள் விவாதித்தனர். மேலும் இருநாடுகள் சார்ந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய பிரதமர் மோடி, உள்ளூர் கரன்சி மூலமாகவே இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான வர்த்தகத்தை தொடங்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் தற்போது 85 பில்லியன் டாலராக உள்ளது. இது 100 பில்லியன் டாலரை தாடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
இதன் மூலம் இந்திய ரூபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் திர்ஹாம் ஆகியவை எல்லை தாண்டிய வர்த்தகத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் கரன்சியை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் பரிவர்த்தனை செலவுகள் குறைவதோடு பரிவர்த்தனைகளுக்கான நேரமும் குறையும் என்றும்.
அது மட்டும் இன்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் பணி புரியும் இந்தியர்கள் சொந்த நாட்டிற்கு பணம் அனுப்புவதிலும் உள்ள சிரமங்கள் குறைய உள்ளது.
Input From: DTNExt