குப்பையான இரும்பு கசடுகளை வைத்து சாலை: குஜராத்தில் சாதித்து காட்டிய மத்திய அரசு!
By : Kathir Webdesk
மும்பை - கோவா இடையே புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை எண்.66 ஆக உருவாக்கப்பட்டு வரும் இந்த புதிய விரைவுச்சாலை அடுத்த 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில், ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் திறந்து வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய நெடுஞ்சாலையினால் மும்பை- கோவா இடையேயான பயணம் நேரம் ஆனது ஏறக்குறைய 4 மணிநேரம் 30 நிமிடங்களாக குறையும். மும்பை, கோவா இடையேயான தொலைவு 600 கிமீ ஆகும். இதனை தற்போதைய என்.எச்48 சாலை வழியாக கடக்க தற்சமயம் ஏறக்குறைய 11 மணிநேரங்கள் தேவைப்படுகிறது.
காஷேடி காட் என்ற பகுதி வழியாக செல்லும் இந்த நெடுஞ்சாலையில் 2 சுரங்கங்கள் அமைய உள்ளன.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஜேஸ்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலை-66 (மும்பை-கோவா) கட்டுமானத்தில் இரும்பு கசடுகளை கையாளும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு மத்திய எஃகு அமைச்சகமும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவதாக மத்திய இணையமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே எடுத்துரைத்தார்.
இந்தியா உலகிலேயே இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தி செய்யும் நாடு என்றும், நம் நாட்டில் 19 மில்லியன் டன் எஃகு கழிவுகள் திடக்கழிவுகளாக உருவாகிறது என்றும், இது 2030-ம் ஆண்டுக்குள் 60 மில்லியன் டன்னாக உயரும் என்றும் மத்திய இணையமைச்சர் ஃபக்கன் சிங் தெரிவித்தார்.
எஃகு கழிவுகளை அகற்ற போதிய வழிகள் இல்லாத்தால், நீர், காற்று மற்றும் நில மாசுபாட்டிற்கு வழி வகுக்கிறது. குஜராத்தின் சூரத்தில் எஃகு கழிவுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள சாலையில் சுமார் ஒரு லட்சம் டன் எஃகு கசடு பயன்படுத்தப்பட்டுள்ளது என கூறினார்.
Input From: ANI