சவால் மிகுந்த வடகிழக்கு மாநிலத்திலும் ரயில், விமானம், சாலை வசதிகளை துணிந்து முடிக்கும் மத்திய அரசு!
By : Kathir Webdesk
வடகிழக்கு மாநிலங்களில் ரயில், விமானம் மற்றும் சாலை நெட்வொர்க்குகளை உருவாக்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பட்டியலிட்டார்.
சாலை இணைப்பு:
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.1,02,594 கோடி மதிப்பீட்டில் 261 சாலைத் திட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாநில பொதுப்பணித் துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், வடகிழக்கு சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வடகிழக்கு சாலை மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் ரூ.3372.58 கோடி மதிப்பிலான 77 சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ரயில் இணைப்பு:
வடகிழக்கு மாநிலங்களில் ரூ.81,941 கோடி செலவில் மொத்தம் 1909 கி.மீ நீளமுள்ள 19 இரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு, செயலாக்கத்தின் பல்வேறு நிலைகளில் உள்ளன. இவற்றில் 482 கி.மீ. நீளத்திற்கு 2023 மார்ச் வரை ரூ.37,713 கோடி செலவிடப்பட்டுள்ளது.
விமான இணைப்பு:
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் பிராந்திய இணைப்புத் திட்டமான உடான் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வடகிழக்கு பிராந்தியத்தில் உடான் திட்டத்தின் கீழ் 64 வழித்தடங்களை உள்ளடக்கிய ரூப்சி, தேஜு, தேஜ்பூர், பசிகாட், ஜோர்ஹாட், லீலாபரி, ஷில்லாங், பாக்யாங், இட்டாநகர் மற்றும் திமாபூர் ஆகிய விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
வடகிழக்கு பிராந்தியத்தில் 2014 ஆம் ஆண்டில் ஒன்பது விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருந்தன. தற்போது வடகிழக்கு பிராந்தியத்தில் 16 விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களில் ரூ.1543.70 கோடி மதிப்பிலான 13 முக்கிய பொறியியல் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் வடகிழக்கு மாநிலங்களில் ரயில், விமானம் மற்றும் சாலை வசதிகளின் கீழ் ரூ.4345.16 கோடி மதிப்பிலான 51 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Input From: NewsOnAir