புதுப்பிக்கவல்ல எரிசக்தி மேம்பாட்டு நடவடிக்கைகள்.. மாஸ் காட்டும் மோடி அரசு..
By : Bharathi Latha
புதுப்பிக்கவல்ல எரிசக்தி என்பது இயற்கை வளங்களிலிருந்து பெறப்பட்ட எரிசக்தியாகும். இது பயன்படுத்தப்படுவதை விட அதிக விகிதத்தில் மீண்டும் பெறப்படுகிறது. அத்தகைய எரிசக்தி ஆதாரங்களில் சூரியன், காற்று, நீர், உயிரி, புவிவெப்பம் போன்றவை அடங்கும். எரிசக்திக்காக இந்த ஆதாரங்களைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும். நாட்டில் புதுப்பிக்கவல்ல எரிசக்தியை மேம்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் இதோ, தானியங்கி முறையில் 100 சதவீதம் வரை அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தல்.
2025 ஜூன் 30 ஆம் தேதிக்குள் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் திட்டங்கள் மூலமான சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை மாநிலங்களுக்கு இடையே விற்பனை செய்ய மாநிலங்களுக்கு இடையே கொண்டுசெல்லும் நடைமுறைக்கான கட்டணங்கள் தள்ளுபடி, 2029-30 ஆம் ஆண்டு வரை புதுப்பிக்கவல்ல எரிசக்தி கொள்முதல் பொறுப்புக்கான வழிமுறைகளை அறிவித்தல், பிரமாண்டமான புதுப்பிக்கவல்ல எரிசக்திப் பூங்காக்களை அமைக்கும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி நிறுவனம் அமைபோருக்கு நிலம் மற்றும் பரிமாற்றம் வழங்குதல் போன்றவற்றிக்கு பிரதான் மந்திரி கிசான் உர்ஜா திட்டங்கள் உதவுகிறது.
புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வெளியே அனுப்புவதற்காக பசுமை எரிசக்தி நடைபாதை திட்டத்தின் கீழ் புதிய மின் தொடரமைப்பு பாதைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடைசியாக 30.06.2023 நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 176.49 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் நிறுவப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
Input & Image courtesy: News