Kathir News
Begin typing your search above and press return to search.

மனதின் குரல் நிகழ்ச்சி.. ஆன்மீகத்தை பற்றி ஆழமான கருத்துக்களை பகிர்ந்த பிரதமர் மோடி..

மனதின் குரல் நிகழ்ச்சி.. ஆன்மீகத்தை பற்றி ஆழமான கருத்துக்களை பகிர்ந்த பிரதமர் மோடி..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  31 July 2023 2:27 AM GMT

நேற்று பிரதமர் மோடி அவர்களின் மனதின் குரல் நிகழ்ச்சியில் 103 வது அத்தியாயத்தில் பிரதமர் ஆற்றிய உரைகள். "ஹிந்தியில் ச்ராவணம் என்று சொல்லப்படும் புனிதமான ஆடி மாதம். சதாசிவனான மகாதேவரை வணங்கிப் பூசிப்பதோடு கூடவே, இந்த மாதம் பசுமை மற்றும் சந்தோஷங்களோடு தொடர்புடையது. ஆகையால், இந்த ஆடி மாதம் ஆன்மீகத்தோடு கூடவே கலாச்சாரப் பார்வையும் மகத்துவமும் நிறைந்தது. சிராவணத்தின் உற்சவங்கள், அதாவது சிராவணம் என்றாலே ஆனந்தம், உல்லாசம் தான். நமது இந்த நம்பிக்கை மற்றும் இந்தப் பாரம்பரியங்களில் மேலும் ஒரு பக்கமும் உண்டு. நமது இந்தத் திருநாட்களும் பாரம்பரியமும் நமக்கு இயக்கத்தை அளிக்கின்றன. சிராவணத்திலே சிவத்தைப் பூசிக்கும் வகையிலே, எண்ணற்ற பக்தர்கள் காவட் யாத்திரையை மேற்கொள்கிறார்கள்.


ஆடி மாதம் காரணமாக இந்த நாட்களில் 12 ஜோதிர்லிங்கங்களுக்கு நிறைய பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றார்கள். பனாரஸ் வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் இருக்கிறது. இப்போது காசிக்கு ஒவ்வோர் ஆண்டும் பத்து கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அயோத்தி, மதுராபுரி, உஜ்ஜைன் போன்ற புனிதத் தலங்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் கூட வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் இலட்சக்கணக்கான ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது, அவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுகிறது. இவையனைத்தும் நமது கலாச்சார விழிப்புணர்வின் விளைவு தான். இப்போது உலகத்தோர் அனைவரும் நமது புனிதத்தலங்களை நோக்கி வருகிறார்கள்.


அந்த வகையில் எனக்கு இரண்டு அமெரிக்க நண்பர்களைப் பற்றித் தெரிய வந்திருக்கிறது. இவர்கள் கலிஃபோர்னியாவிலிருந்து இங்கே அமர்நாத் யாத்திரை மேற்கொள்ள வந்திருந்தார்கள். இந்த அயல்நாட்டு விருந்தினர்கள் அமர்நாத் யாத்திரையோடு தொடர்புடைய சுவாமி விவேகானந்தரின் அனுபவங்கள் குறித்தும் எங்கோ கேள்விப் பட்டிருக்கிறார்கள். இது இவர்களுக்கு அதிக கருத்தூக்கத்தை அளித்து, இவர்கள் தாங்களே அமர்நாத் யாத்திரையை மேற்கொள்ள முடிவெடுத்தார்கள். இதை இவர்கள் பகவான் போலேநாத்தின் ஆசிகளாகவே கருதுகிறார்கள். இது தான் பாரதத்தின் சிறப்பு" என்று ஆன்மீகத்தைப் பற்றி மிகவும் ஆழமாக குறிப்பிட்டு இருந்தார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News