இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் புதிய இந்தியா.. மாஸ் காட்டும் மோடி அரசு..
By : Bharathi Latha
நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்களை புனரமைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55, பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்தியப் பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலங்கானாவில் தலா 21, ஜார்க்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தலா 18, ஹரியானாவில் 15, கர்நாடகாவில் 13 உட்பட 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த 508 நிலையங்கள் உள்ளன. கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் புதிய இந்தியா, அமிர்த காலத்தின் தொடக்கத்தில் உள்ளது என்று குறிப்பிட்டார்.
1300 ரயில் நிலையங்களில் சுமார் ரூ.25,000 கோடி செலவில் 508 அமிர்த இந்திய ரயில் நிலையங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார். மறுசீரமைப்புத் திட்டம், ரயில்வே மற்றும் சாமானிய குடிமக்களுடன் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஒரு பெரிய பிரச்சாரமாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார். இதன் பயன்கள் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று குறிப்பிட்ட பிரதமர், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் சுமார் ரூ.4,000 கோடி செலவில் 55 அமிர்த நிலையங்களும், மத்தியப் பிரதேசத்தில் சுமார் ரூ.1,000 கோடி செலவில் 34 ரயில் நிலையங்களும், மகாராஷ்டிராவில் 44 ரயில் நிலையங்கள் ரூ.1,500 கோடி செலவிலும் மேம்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்காக ரயில்வே அமைச்சகத்தைப் பாராட்டிய பிரதமர், குடிமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். உலகில் இந்தியாவின் வளர்ந்து வரும் மதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், இந்தியா மீதான வளர்ந்து வரும் உலகளாவிய ஆர்வத்தை எடுத்துரைத்தார்.
Input & Image courtesy: News