வீடுதோறும் மூவர்ணக்கொடி.. இந்த ஆண்டும் களமிறங்கும் அஞ்சலகங்கள்..
By : Bharathi Latha
வீடுதோறும் மூவண்ணக்கொடி என்பதை செயல்படுத்த அஞ்சலகங்களில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்ட இருக்கிறது. வீடுதோறும் மூவண்ணக்கொடி என்பதை செயல்படுத்த அஞ்சலகங்களில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ரூ 25 என்ற விலையில் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கு www.epostoffice.gov.in என்ற இணையதளம் மூலம் 12ம் தேதி வரை மூவண்ணக்கொடிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
வீடுதோறும் மூவண்ணக்கொடி என்ற இயக்கத்தை மக்களிடையே பிரபலப்படுத்த சென்னை வடக்கு அஞ்சலகக் கோட்டத்தின் சார்பில் மகளிர் பேரணி இன்று அண்ணா நகரில் நடைபெற்றது. தேசிய ஒற்றுமை மற்றும் பெருமிதத்தைப் பறைசாற்றும் விதமாக இந்தபேரணி அமைந்தது. கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இல்லம்தோறும் மூவர்ணக் கொடி உள்ளம் தோறும் தேச பக்தி என்ற பெயரில் அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை மூன்று நாட்கள் சுதந்திர தினத்தின் அன்றின் இருந்து ஏற்ற இடம் என்று அனுமதி வழங்கியது. அந்த வகையில் இந்த ஆண்டும் அதே நடைமுறை தொடர்கிறது.
பேரணி நிறைவில், சென்னை அண்ணாநகர் முதன்மை அஞ்சலகத்தில் நடைபெற்ற தேசிய மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் தலைவர் அனிதா பால்துரையிடம் மூவண்ணக்கொடி ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் லட்சுமணன் பிள்ளை, உதவி கண்காணிப்பாளர் முத்துமாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Input & Image courtesy: News