Kathir News
Begin typing your search above and press return to search.

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் உலகத் தரம் வாய்ந்த சட்டம்..

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் உலகத் தரம் வாய்ந்த சட்டம்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Aug 2023 8:56 AM GMT

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சனிக்கிழமை பெங்களூரில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், புத்தொழில் வல்லுனர்கள் மற்றும் முக்கிய குடிமக்களுடன் கலந்துரையாடினார். அமர்வின் போது, வரலாற்று சிறப்புமிக்க தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப் பட்டதன் பின்னணி குறித்து அவர் விவரித்தார்.


ஆரம்பத்தில் இருந்து ஒரு சட்டமாக அதன் தற்போதைய நிலை வரை அதன் போக்கை அவர் விளக்கினார். 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது தனியுரிமை என்ற கருத்தாக்கத்தை நாடாளுமன்ற விவாதப் பொருளாக அறிமுகப்படுத்தியதிலிருந்து தொடங்கிய அதன் பயணத்தை அவர் பகிர்ந்து கொண்டார். "டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் ஒரு உலகத் தரம் வாய்ந்த சட்டம். ஆகஸ்ட் 15 2021 நமது பிரதமர் நரேந்திர மோடி டெக்டேட் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். இது நாளை தொழிலாளர்களின் ஒரு பகுதியாக இருக்கும் மாணவர்கள், இளம் இந்தியர்களுக்கு தொழில்நுட்ப வாய்ப்புகள் நிறைந்த எதிர்காலம் குறித்த அவரது பார்வையை பிரதிபலிக்கிறது.


கடந்த 2010-ம் ஆண்டு நான் MP-யாக இருந்த போது, அந்தரங்க தகவல்களை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்க வேண்டும் என்ற தனியார் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தேன். துரதிர்ஷ்ட வசமாக, அது ஒரு அவசியமான விவாதம் என்று அந்த நேரத்தில் அரசாங்கம் உணரவில்லை. அடிப்படையில் இந்த நாட்டின் குடிமக்களின் தனிப்பட்ட தரவுகள் சுரண்டப் படுகின்றன" என்று அமைச்சர் தனது உரையாடலின் போது கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த ஒரு பரந்த நோக்கத்துடன் இந்த சட்டம் எவ்வாறு ஒருங்கிணைக்கிறது என்பதை ராஜீவ் சந்திரசேகர் விளக்கினார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News