இதுதான் மோடி ஸ்டைல்...! பிரிவினைவாதிகள் முகத்தில் கரியை பூசிய காஷ்மீர்....!
By : Mohan Raj
ஆர்டிகள் 370 எதிர்த்தவர்கள் முகத்தில் கரியை பூசிய காஷ்மீர் மாநிலம் மக்கள்... வேற லெவலில் இருக்காமே...?
ஆர்டிகல் 370 என்பது காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் முக்கிய பிரிவு, இந்த ஆர்ட்டிகள் 370 பிரிவில் ஜம்மு அண்ட் காஷ்மீர் மாநிலத்திற்கு இரட்டை குடியுரிமை உள்ளது என்றும் இந்திய தேசியக்கொடி போலவே ஜம்மு அண்ட் காஷ்மீர் மாநிலத்திற்கு என தனி கொடி இருந்தது!
மேலும் சட்டசபை காலம் ஆறாண்டுகள் போன்ற விதிமுறைகளுடன் உருவாக்கப்பட்டது தான் ஆர்டிகள் 370. மேலும் ஆர்டிகள் 370 என்பது நாட்டிற்கான சிறப்பு அந்தஸ்தையும் பிரிவு 35 ஏ என்பது மக்களுக்கான சிறப்பு அந்தஸ்தையும் குறிக்கிறது அதாவது இந்தியாவில் மற்ற மாநிலங்களில் வசிக்கும் மக்கள் காஷ்மீரில் சொத்துக்களை வாங்குவதற்கு அனுமதி இல்லை.
சட்ட பிரிவு 370 இன் படி பாதுகாப்பு வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு விஷயங்களை தவிர பிற சட்டங்களை இயற்ற மத்திய அரசு அந்த மாநிலத்தின் அனுமதி பெற்று செய்ய வேண்டும் என்று நிலையை உருவாக்கி வைத்திருந்தது.
மேலும் ஜம்மு பகுதியில் முஸ்லிம் மக்கள் அதிக அளவிலும் காஷ்மீர் பகுதியில் இந்துக்கள் அதிகளவிலும் மற்றும் லடாக் பகுதியில் பௌத்தர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர் இதனால் அவர்களுக்கு இடையே சமூக ரீதியிலான மதக் கலவரங்கள் ஏற்பட்ட வண்ணமே இருக்கும் அது மட்டும் இல்லாமல் ஜம்மு அண்ட் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமா? இந்தியாவுக்கு சொந்தமா என்ற வாக்குவாதம் நீண்ட காலமாக வருவதால் பாரத பிரதமர் மோடி ஜம்மு அண்ட் காஷ்மீருக்கு அளித்த 370 சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து உத்தரவிட்டார். ஜம்மு அண்ட் காஷ்மீரில் 370 ஆவது சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் அனைத்து எதிர் கட்சிகளும் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் 76 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடிய நிலையில் இந்தியாவில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். ஜம்மு அண்ட் காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று வருடம் தோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கலவரத்துடன் மிகவும் கோரமாகவும் கூடிய காட்சி தான் நிகழும் மேலும் மாநிலத்தில் தொலைத்தொடர்பு போக்குவரத்து இணையம் ஆகியவை முடக்கப்பட்டு ராணுவப் படையின் பலத்த பாதுகாப்புடன் காட்சியளிக்கும் மேலும் மத கலவரத்துடன் சேர்த்து அடிதடி கொலை மற்றும் எங்கு பார்த்தாலும் ரத்த காயங்கள் துப்பாக்கிச் சூடு குண்டு வெடிப்பு போன்ற நிகழ்வுகளால் ஜம்மு அண்ட் காஷ்மீர் மாநிலமே இருண்ட நிலையில் காணப்படும்.
ஆனால் இந்த முறை சுதந்திர தினத்தன்று ஜம்மு அண்ட் காஷ்மீரில் உள்ள மக்கள் தேசிய கொடியை கையில் ஏந்தி சுதந்திரமாக சுதந்திர தினத்தை கொண்டாடிய செய்தி நாடு முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டும் இல்லாமல் பிரம்மிக்கவும் வைத்துள்ளது நமது பாரத பிரதமர் மோடி ஆர்டிகள் 370ஐ ஜம்மு அண்ட் காஷ்மீரில் இருந்து நீக்கியதின் வெளிப்பாடு தற்போது சுதந்திர தின கொண்டாட்டத்தில் காஷ்மீர் மக்கள் உற்சாகத்துடன் மிகுந்த சந்தோஷமாகவும் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் காஷ்மீரில் உள்ள மக்கள் சுதந்திர தினத்தன்று வெளியிட்ட வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு அண்ட் காஷ்மீரில் ஆர்டிகல் 370 பிரிவு ரத்து செய்ததால் மக்கள் அனைவரும் சுதந்திரமாக இருந்து வருவதாக கூறியவுடன் இதனை வைத்து அரசியல் செய்த எதிர் கட்சிகளுக்கு முகத்தில் கரியை பூசிய தாக இருந்தது எனவும் தற்போது தேசிய அளவிலான விமர்சனங்கள் எழுந்துள்ளன .......