பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமை.. இந்திய சுகாதாரத் துறையின் பங்களிப்பு..
By : Bharathi Latha
G20 இந்தியத் தலைமைத்துவத்தின் கீழ் எங்கள் பார்வை தெளிவானது, எங்கள் இலக்குகள் உயர்வானவை, எங்கள் உறுதி தளர்வில்லாதது என்று டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார் "எங்கள் பார்வை தெளிவானது, எங்கள் இலக்குகள் உயர்வானவை, எங்கள் உறுதி தளர்வில்லாதது" என்று காந்திநகரில் நடைபெற்ற ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில், மத்திய சுகாதாரம், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் துறையில் இந்தியாவின் திறமையைப் பெருமையுடன் வெளிப்படுத்திய டாக்டர் மாண்டவியா , உலகளாவிய மருந்துத்துறையில் இந்தியா ஒரு மைல்கல்லாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது என்றார்.
குறைந்த செலவில், உயர்தர மருந்துகளை வழங்குவதற்கான நாட்டின் அர்ப்பணிப்பு மற்றும் உலகளாவிய அணுகலில் அதன் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இக்கூட்டத்தில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டன, உலகின் தடுப்பூசி தேவைகளில் சுமார் 60% மற்றும் பொதுவான ஏற்றுமதியில் 20-22% இந்தியா வழங்குகிறது. மனிதகுல நல்வாழ்வில் இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் குறிப்பாகக் கொவிட் -19 தொற்றுநோயின் போது இது நிரூபிக்கப்பட்டதையும் டாக்டர் மாண்டவியா சுட்டிக் காட்டினார். தொற்றுநோய்க்கு எதிரானப் போரில், இந்தியா சுமார் 185 நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் வழங்கியதையும் உலகளாவிய தலைவராக இந்தியாவின் பங்கினையும் அவர் பெருமையுடன் பகிர்ந்துகொண்டார்.
சுகாதாரத்தில் தரம், அணுகல், மலிவு ஆகியவற்றுக்கான எங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது என்று அவர் மேலும் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், சுகாதாரத் துறையில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். சுகாதார முன்னேற்றத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்ட டாக்டர் மாண்டவியா, புதுமையான சூழலை வளர்ப்பதில் இந்தியாவின் முன்னேற்றங்களை அறிவித்தார். மருந்து-மருத்துவ சாதனங்கள் துறைகளில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான தேசியக் கொள்கையை அறிமுகப் படுத்துவதற்கான இறுதிக் கட்டத்தில் இந்தியா உள்ளது என்று அவர் கூறினார்.
Input & Image courtesy: News