காலத்தால் அழியாத காந்திஜியின் லட்சியங்கள்.. நிறைவேற்றிக் காட்டி வரும் பிரதமர் மோடி அரசாங்கம்..
By : Bharathi Latha
ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் G20 நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி காலத்தால் அழியாத காந்திஜியின் லட்சியங்கள் இணக்கமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான உலகளாவிய எதிர்காலத்திற்கான நமது கூட்டுக் கண்ணோட்டத்தை வழி நடத்துகின்றன. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் G20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேற்று புகழ்பெற்ற ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். காலத்தால் அழியாத காந்திஜியின் லட்சியங்கள், இணக்கமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான உலகளாவிய எதிர்காலத்திற்கான கூட்டுக் கண்ணோட்டத்தை வழிநடத்துகின்றன என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
எக்ஸ் சமூக ஊடகத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது, "புகழ்பெற்ற ராஜ்காட்டில், ஜி 20 குடும்பம், அமைதி, சேவை, இரக்கம் மற்றும் அகிம்சை ஆகியவற்றின் கலங்கரை விளக்கமான மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தியது. பல்வேறு நாடுகள் ஒன்றிணையும் போது, காந்திஜியின் காலத்தால் அழியாத லட்சியங்கள், இணக்கமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான உலகளாவிய எதிர்காலத்திற்கான நமது கூட்டுக் கண்ணோட்டத்தை வழி நடத்துகின்றன.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு வருமாறு, "G20 குடும்பம் பாபுவுக்கு அஞ்சலி செலுத்துகிறது. உலகத் தலைவர்கள் ராஜ்காட்டுக்குச் சென்று மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்”. மகாத்மா காந்தியின் ஒவ்வொரு லட்சியங்களும் குறிப்பாக இந்தியாவை பற்றி அவர் கண்ட கனவுகளை நினைவாக்கும் வகையில் தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வேலை செய்து கொண்டு வருவதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News