Begin typing your search above and press return to search.
அமித் ஷாவின் அசாம் பயணம்!! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

By : Bharathi Latha
மியான்மர் மற்றும் வங்கதேசம் நாட்டைச் சேர்ந்த சிலர் அசாம் எல்லை பகுதி வழியாக இந்தியாவுக்குள் அதிகளவில் ஊடுருவுகின்றனர். இவர்களை திருப்பி அனுப்பும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில் ஊடுருவல் பெரும் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.
வரும் 20-ம் தேதி அசாம் மாநிலத்தின் சசார் மாவட்டத்தின் நதன்பூர் கிராமத்துக்கு அமைச்சர் அமித் ஷா செல்கிறார். ஏற்கனவே சட்டவிரோத குடியேறிகள் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
அங்கு சர்வதேச எல்லைப் பகுதி அருகே அமைந்திருக்கும் நதன்பூர் கிராமத்துக்கு சென்று பல்துறை மேம்பாட்டு நிகழ்ச்சிகளில் அமித் ஷா பங்கேற்கிறார். அதனால் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் அசாம் போலீசார் செய்து வருகின்றனர்.
Next Story
