ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ச்சிப் பாதை குறித்து பேசிய சாம் ஆல்ட்மேன்!!

By : Bharathi Latha
10 கோடி பேர் இந்தியாவில் மட்டும் வாரந்தோறும் சாட் ஜிபிடி தளத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் மாணவர்கள் என தெரிகிறது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் கோடிங் தளமான கோடெக்ஸ் பயன்பாட்டில் உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா உள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியை எட்டிய நிலையில் பள்ளி அளவிலான கணிதப் பாடங்களுக்கே திணறிய ஏஐ தொழில்நுட்பம், இன்று ஆராய்ச்சி அளவிலான கணிதத் தீர்வுகளை வழங்குவதுடன், இயற்பியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது நாட்டின் கைகளில் முடங்கிவிடக் கூடாது. இது ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் சுதந்திரம், சமத்துவம், மனித குல வளர்ச்சி உறுதி செய்யப்படும். தொழில்நுட்ப வளர்ச்சி பழைய வேலைகளை மாற்றியமைக்கும், மனிதர்கள் புதிய மற்றும் சிறந்த வேலைகளைக் கண்டறிவார்கள்.
