Kathir News
Begin typing your search above and press return to search.

பாஜக-திமுக மோதல்!! ஈரான் ஆதரவு போராட்டம் குறித்து கடும் பதற்றம்!!

பாஜக-திமுக மோதல்!! ஈரான் ஆதரவு போராட்டம் குறித்து கடும் பதற்றம்!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 March 2026 8:30 PM IST

தமிழக அரசு மத்திய அரசின் பாதுகாப்பு எச்சரிக்கையை மீறி இருப்பதாக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதத்தில் ஈரானுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதித்தது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.


மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, பிப்.28 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் நாடு தழுவிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதை அலட்சியப்படுத்திவிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தனது கூட்டணி கட்சிகள் ஈரானுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.


கத்தார், துபாய், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் பணிபுரிகின்றனர். ஈரான் அந்த நாடுகளின் மீது தாக்குதல் நடத்தும்போது மவுனமாக இருந்த அமைப்புகள், இப்போது வன்முறையைத் தூண்டுவது அங்குள்ள இந்தியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என பாஜக தெரிவித்துள்ளது.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக மத்திய பாதுகாப்புப் படைகளைத் தமிழகத்தில் குவிக்க வேண்டுமென பாஜக கோரிக்கை முன்வைத்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News