Begin typing your search above and press return to search.
இந்தியா-ரஷ்யா கச்சா எண்ணெய் ஒப்பந்தம்!! மத்திய அரசு திட்டவட்டம்!!

By : Bharathi Latha
போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில், ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து தடைபட்டு, உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 30%க்கு மேல் உயர்ந்துள்ளது.
இதைதொடர்ந்து 30 நாட்களுக்கு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
மத்திய அரசு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா ஒருபோதும் எந்த நாட்டின் அனுமதியையும் சார்ந்து இருந்ததில்லை என தெரிவித்துள்ளது. இந்தியா தனது எரிசக்தி விநியோகத்தை பாதுகாப்பாகவும் சீராகவும் வைத்துள்ளது.
Next Story
