Kathir News
Begin typing your search above and press return to search.

மகாராஷ்டிரா மதமாற்ற தடுப்பு சட்டம்!! சர்ச்சைக்குரிய மசோதா!!

மகாராஷ்டிரா மதமாற்ற தடுப்பு சட்டம்!! சர்ச்சைக்குரிய மசோதா!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 March 2026 6:32 PM IST

பா.ஜ.க ஆளும் சில மாநிலங்களில் மதமாற்ற தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் அதற்கு தடை விதித்ததை தொடர்ந்து, எதிர்த்து மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.


மகாராஷ்டிராவில் மதமாற்றத்தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மத சுதந்திர மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா மற்ற மாநிலங்களில் உள்ள சட்டங்களை விட மிகவும் கடுமையான விதிகளைக் கொண்டுள்ளது.

அதன்படி திருமணத்தின் பெயரில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.


இந்த மசோதா பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. சிட்டிசன்ஸ் பார் ஜஸ்டீஸ் அண்ட் பீஸ் உட்பட 35 சிவில் சமூக அமைப்புகள் இந்த மசோதாவை எதிர்த்துள்ளன.


இது தனிமனித சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைப் பறிப்பதாக இருக்கிறது என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News