Kathir News
Begin typing your search above and press return to search.

பொதுமுடக்கம் வதந்தி!! யாரும் நம்பவேண்டாம்... மத்திய அரசு மறுப்பு!!

பொதுமுடக்கம் வதந்தி!! யாரும் நம்பவேண்டாம்... மத்திய அரசு மறுப்பு!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 March 2026 9:29 PM IST

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியாவில் பொதுமுடக்கம் குறித்த வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என்று தெரிவித்துள்ளார்.


அமெரிக்கா மற்றும் ஈரான் போர் காரணமாக எரிபொருட்களுக்கான பற்றாக்குறை அதிகரித்து, கோவிட் பெருந்தொற்று காலத்தில் இருந்தது போல பொதுமுடக்கம் மீண்டும் ஏற்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகிறது. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.


உலகளாவிய நிலைமை தொடர்ந்து நிலையற்றதாகவே உள்ளது என்று கூறிய அமைச்சர், எரிசக்தி, விநியோகச் சங்கிலிகள், அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான களநிலவரங்களை மத்திய அரசு கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.


பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, குடிமக்களுக்கு எரிபொருள், எரிசக்தி, பிற அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய எல்லா வழிகளிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.


2 மாதங்களுக்குத் தேவையான எரிபொருள்தற்போது இந்தியாவிடம் இருப்பதாகவும், எனவே பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. அதற்காக மக்கள் பயப்பட தேவையில்லை என்று மத்திய பெட்ரோலியம் அமைச்சகம் கூறியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News