Begin typing your search above and press return to search.
புதுச்சேரி தேர்தல்!! மோடி, அமித் ஷா பிரச்சாரம்!!

By : Bharathi Latha
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடக்க உள்ளது. இதைக்குறித்து என்டிஏ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி வரும் 3-ம் தேதி புதுச்சேரி வருகிறார்.
மோடி ‘ரோடு ஷோ’வில் பங்கேற்று, ஆதரவு திரட்டுகிறார். முன்னதாக வரும் 30-ம் தேதி புதுச்சேரியில் உள்ள பாஜகவின் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக பிரதமர் கலந்துரையாடுகிறார்.
வரும் 6-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வருகிறார். திருக்கனூர் கடைவீதியில் நடக்கும் என்டிஏ வேட்பாளர்களுக்கான பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார்.
Next Story
